கணபதி மாநகரில் வேலை செய்த வீட்டில் கைவரிசை!

கோவை: கோவை கணபதியில் வேலை செய்த வீட்டில் 9 பவுன் தங்க நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதிமாநகரை சேர்ந்தவர் வில்லியம்ஸ். இவரது மனைவி வள்ளி(70). இவர்கள் வயது மூப்பு காரணமாக தங்களை பார்த்து கொள்ளவும், வீட்டு வேலை செய்யவும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஈஸ்வரி(28) என்ற பெண்ணை வேலைக்கு வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வள்ளி தான் அணிந்திருந்த 9 பவுன் தங்க செயினை டிவி டேபிள் மீது வைத்திருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, நகையை காணவில்லை. வேலைக்கார பெண்ணான ஈஸ்வரியும் மாயமாகி இருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வள்ளி உடனே இது குறித்து சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், 9 பவுன் நகையை திருடியது வீட்டு வேலை செய்து வந்த நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ராம்வினித் மனைவி ஈஸ்வரி என்பது தெரியவந்தது. போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை வளர்ச்சி திட்டப்பணிகள்- கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார்,...

Video

Join WhatsApp