Coimbatore Weather Report: கோவையில் இந்த வார வானிலை எப்படி இருக்கும் என்ற முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 31.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 19.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
இதனிடையே அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பி பின்வருமாறு:-
பிப்ரவரி 5 (வியாழன்)
வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரங்களில் வெப்பம் சற்று அதிகமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 19 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.
பிப்ரவரி 6 (வெள்ளி)
கோவையில் பகுதி மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவும். வெப்ப நிலை சற்று அதிகரித்து, அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
பிப்ரவரி 7 (சனி)
வானம் பெரும்பாலும் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ்.
பிப்ரவரி 8 (ஞாயிறு)
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 19 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
பிப்ரவரி 9 (திங்கள்)
பகல் நேரங்களில் வெப்பம் அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு.
பிப்ரவரி 10 (செவ்வாய்)
கோவையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
இந்த நாட்களில் கோவையில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த வானிலை முன்னறிவிப்புக்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவிடுங்கள்.

