ஆட்டோ பாகங்களை ஆட்டோவில் வந்து திருடிய கும்பல்- கோவையில் பரபரப்பு சிசிடிவி காட்சிகள்…

கோவை: ஆட்டோவில் வலம் வந்து இதர ஆட்டோ உள்ள பொருட்களை கொள்ளையடித்து செல்லும் கும்பலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை மாநகர், சிவானந்தா காலனி புதுப்பாலம் பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் கண்ணன் மற்றும் கணேசன் ஆகியோர் தங்களது ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆட்டோவில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல், அந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோவை நிறுத்தி சுற்றும் முற்றும் நோட்டமிட்டு, கண்ணன் மற்றும் கணேசனின் ஆட்டோக்களில் இருந்து கதவு, பேட்டரி மற்றும் ஸ்டெப்னி டயர் ஆகியவற்றை கழற்றித் தங்களது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அங்கு இருந்து சென்று உள்ளனர்.

மறுநாள் காலையில் வந்து பார்த்த அவர்கள், ஆட்டோக்களின் பாகங்கள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போது, ஆட்டோவில் வந்த கும்பல் இந்தத் திருட்டை செய்து இருப்பது தெரியவந்தது.

​இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து உள்ள காவல் துறையினர், இரவு நேரங்களில் ஆட்டோக்களில் வந்து கொள்ளை அடிக்கும் அந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன செய்யலாம்? என்ன கூடாது?

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

Video

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது என்ன?

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.