சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்… மிரட்டலான Seyon Trailer வைரல் – VIDEO

சென்னை: கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் Seyon Trailer, சிவகார்த்திகேயேனின் பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமலஹாசன், சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை தயாரித்தார். இந்த படம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியானது.

ராணுவ வீரர் கதாபாத்திரத்தில், நடிகை சாய்பல்லவி உடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த இந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன்-கமல் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வெளியாகும் என்று ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்திருந்தது.

Advertisement

சேயோன் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் டிரைலரை, சிவகார்த்திகேயன் பிறந்தநாளான இன்று ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது

டிரைலரின் ஆரம்பத்திலேயே, “கருமாத்தூர் விருமாண்டி கோவில் மாசிக்களரி திருவிழாவின் இரண்டாவது நாள்… கப்ரா நடந்து இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு…” என்ற வாசகத்துடன் டிரைலர் தொடங்குகிறது. கிராமத்து செட்-அப்பில் மேளதாளங்களுடன் திருவிழா நடப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

சேயோன் படம் மதுரையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பது டிரைலரில் தெள்ளத் தெளிவாக தெரியவந்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்கி உள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவு விவேக் விஜயகுமார் செய்துள்ளார், படத்தொகுப்பை சன் லோகேஷ் மேற்கொண்டுள்ளனர்.

முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரத்தில் சேயோன் சிவகார்த்திகேயன் மிளிருகிறார். டிரைலரின் முடிவில் “வக்காளி வரண்டியே…” என்று மதுரை பாஷையில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்

படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...

Video

கஞ்சா தகராறு விவகாரம்- காவலரை கடிந்து கொண்ட எஸ்.பி.வேலுமணி…

கோவை: கோவையில் காவலரை கடிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. வெளிநாட்டை சேர்ந்த நபர் கஞ்சா போதையில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் காவல்துறை ஏன் கண்டு...