ஜெயலலிதா பிறந்தநாள்- ரத்த தானம் செய்த எஸ்.பி.வேலுமணி

கோவை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரத்த தானம் செய்தார்.

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது அன்னதானம் வழங்குவது போன்ற நிகழ்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இன்று காலை கோவை அண்ணாசிலை பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரத்த தானம் செய்தார். அவரைத் தொடர்ந்து ஏராளமான அதிமுக தொண்டர்களும் ரத்த தானம் செய்தனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

APK பைலை கிளிக் செய்ததால் ரூ.5.38 லட்சம் பறிபோனது… கோவையில் அதிர்ச்சி!

கோவையில் வங்கி பெயரில் வந்த APK பைலை கிளிக் செய்த தனியார் நிறுவன ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.38 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...