Header Top Ad
Header Top Ad

கோவையில் லாரி கவிழ்ந்து விபத்து… பெண் படுகாயம்… வீடியோ…

கோவை: கோவையில் கான்கிரீட் லாரி பெண் மீது கவிழ்ந்த விபத்தில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

சிங்காநல்லூரை அடுத்த வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா இவர் தனது கணவருடன் பொள்ளாச்சி-கோவை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

Advertisement
Lazy Placeholder

இவர்களது வாகனம், ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் செல்லும் போது, அவ்வழியாக வந்த கான்கிரீட் லாரி கட்டுப்பாட்டை இழந்து ரேணுகா சென்ற இரு சக்கர வாகனம் மீது கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த ரேணுகா மற்றும் அவரது கணவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement
Lazy Placeholder

விபத்து தொடர்பாக, செட்டிபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News

Latest Articles