ஈரான் போர்- கோவையில் இருந்து அபுதாபிக்கு விமானங்கள் ரத்து…

கோவை: ஈரான் போர் காரணமாக கோவை- அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

Advertisement

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் துபாயில் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் நான்கு நாட்கள் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவை வழங்கப்படுகிறது. இரவு 8.40 மணிக்கு புறப்படும் விமானம் அபுதாபிக்கு 11.15 மணிக்கு சென்றடையும், அதேபோல் அபுதாபியில் இருந்து திங்கள், புதன் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.15 மணிக்கு புறப்படும் விமானம் அதிகாலை 5:45 மணிக்கு கோவை வந்து அடையும், இந்த விமான சேவையானது ஈரான் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Advertisement

விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்தினர் கூறுகையில்

அபுதாபியில் இருந்து கோவைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று 160 க்கும் மேற்பட்ட பயணிகள் அபுதாபி செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தனர். ஈரான் போர் காரணமாக வான்வெளி மூடப்பட்டதால் கோவை அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது.

Advertisement

தொடர்ந்து இன்றும் அந்த விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. விமான ரத்து செய்யப்பட்டதால் அதற்கான விமான டிக்கெட் கட்டணங்களை அனைத்தும் பயணிகளுக்கு திரும்பி வழங்கப்படும் என்றனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...