12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் | Today Rasipalan Tamil

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இன்றைய பலன்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

மேஷம்
இன்று எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களை தவிர்த்து விட்டுக்கொடுத்துச் செல்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் அவசியம்.

ரிஷபம்
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்த பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்
திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் சூழல் அமையும்.

கடகம்
மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குழந்தைகளால் பெருமைப்படும் செய்திகள் வந்து சேரும்.

சிம்மம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். தேவையற்ற விவதாங்களைத் தவிர்ப்பது நல்லது. திருமண முயற்சிகளில் முடிவு கிடைக்கலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி
இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் செயல்பாடுகளில் நிதானமாக இருங்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவித்தொகை கிடைக்க தாமதமாகலாம். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்வது மன அமைதியைத் தரும். பழைய கடன் சுமைகள் குறையத் தொடங்கும்.

துலாம்
எடுத்த காரியத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். தேவையற்ற செலவுகளைக் குறைப்பது சேமிப்பிற்கு உதவும். தொழில் ரீதியான பயணங்கள் அலைச்சலைத் தந்தாலும் ஆதாயம் தரும். மற்றவர்களிடம் பேசும் போது நிதானத்தைக் கடைபிடிக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை.

விருச்சிகம்
பொருளாதார மேன்மை உண்டாகும். உறவினர்களுடன் ஏற்பட்ட கசப்புகள் நீங்கி இணக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருமடங்காக உயரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறைந்தாலும் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தனுசு
பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்தத் தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கைகூடும். வாகன பயணங்களின் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். மனநிறைவு கூடும்.

NCC News Rasipalan today
NCC News

மகரம்
புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் பேச்சாற்றலால் பல காரியங்களை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் இணக்கமான உறவு தொடரும்.

கும்பம்
தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பப் பொறுப்புகள் அதிகரித்தாலும் அதனைத் திறம்படச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியையும் பலத்தையும் தரும்.

மீனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் மிகுந்த எச்சரிக்கை தேவை. புதிய முயற்சிகள் மற்றும் முக்கிய முடிவுகளைத் தள்ளி வைப்பது நல்லது. வாகனப் பயணங்களின் போது கவனம் அவசியம். பிறரிடம் பேசும் போது நிதானத்தை இழக்க வேண்டாம்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்கள் | Today Rasipalan Tamil

இன்றைய தினத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் என்ன பலன் காத்திருக்கிறது? தொழில், வருமானம், குடும்ப உறவுகள், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய தகவல்களுடன் இன்றைய ராசிபலன் | Today Rasipalan

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...