சூலூரில் 37 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்…

கோவை: சூலூர் அருகே ஆவணங்களின்றி கொண்டு வந்த 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை சூலூர் சிந்தாமணிபுதூர் டோல்கேட் பகுதியில் தேர்தல் நிலைக்கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பேருந்தில் பயணம் செய்த மது சுதன் ராணா என்பவரின் உடைமைகளை சோதனையிட்டபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

அவரது உடமைகளைச் சோதித்ததில், அவரிடம் 255 கிராம் தங்க நகைகள் இருப்பது கண்டறியப்பட்டது.இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 37 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிடிபட்ட நபரிடம் நகைகளுக்கான முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அதிகாரிகள் அந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் பாதுகாப்பாக சூலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும்,உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து நகைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விதை கருத்தரங்கு

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை மையம் சார்பாக 12வது விதை கருத்தரங்கு நடைபெற்றது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் விதை மையம் சார்பாக. 12வது விதை கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்,...

Video

கோவையில் செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: செல்போன் வாங்குவது போல் நடித்து திருடிச் சென்ற இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. வடவள்ளி பகுதியில் செல்போன் வாங்குவது போல நடித்து, இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக் கொண்டு தப்பி ஓடிய...