திடீரென அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்…

கோவை: அண்ணாமலையை திடீரென கோவை அதிமுக வேட்பாளர்கள் நேரில் சந்தித்தனர்.

Advertisement

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை கோவையை சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் இன்று திடீரென நேரில் சந்தித்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலானது வெளியாகி வேட்பாளர்கள் அனைவரும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதேசமயம் தேசிய ஜனநாயகக் கூட்டணி பாஜக வேட்பாளர் பட்டியல் ஆனது தற்பொழுது வரை வெளியிடப்படவில்லை. கோவை மாவட்டத்தில் வடக்கு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படவில்லை. கோவை வடக்கு தொகுதியில் யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியிலும் அந்த தொகுதி மக்கள் மத்தியிலும் உள்ளது.

Advertisement

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்கள் அம்மன் அர்ஜுனன், கே ஆர் ஜெயராம், பி ஆர் ஜி அருண்குமார், சூலூர் கந்தசாமி ஆகியோர் அண்ணாமலையை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்துள்ளனர்.

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் யார் என்று தற்பொழுது வரை அறிவிக்கப்படாமல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ள நிலையில் கோவையை சேர்ந்த அதிமுக வேட்பாளர்கள் பலரும் அண்ணாமலையை நேரில் சந்தித்துள்ளனர். எனவே கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளாரா என்ற கேள்விகளும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெல்லி போராட்டம்- கோவையில் காத்திருப்பு போராட்டம் மூலம் ஆதரவு…

கோவை: டெல்லி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திமுக அலுவலகத்திற்குள் மாணவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் திமுக அலுவலகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...