இன்றைய ராசிபலன் | horoscope today

12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை இந்த தொகுப்பில் காணலாம்

மேஷம்
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அமைதி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபாடு காட்டி வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்
சொத்து சம்பந்தமான விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் ஈட்டும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் சிறப்பாக அமையும்.

Advertisement

மிதுனம்
பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணப்படும் நாளாக அமையும். தடைப்பட்ட சுப காரியங்கள் மீண்டும் தொடங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்களுடன் இணக்கமான சூழல் நிலவும். வெளிநாட்டு பயண முயற்சிகள் கைகூடும். தன்னம்பிக்கை உயரும்.

கடகம்
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். புதிய முயற்சிகளைத் தவிர்த்து வழக்கமான பணிகளில் கவனம் செலுத்தவும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் தேவை. பயணங்களில் கூடுதல் எச்சரிக்கை அவசியம். இறைவழிபாடு மன அமைதி தரும்.

சிம்மம்
தொழில் விரிவாக்கப் பணிகள் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு தொடர்பான செய்திகள் மகிழ்ச்சி தரும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பழைய நண்பர்களைச் சந்தித்து அளவளாவுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறைய வழி பிறக்கும். ஆரோக்கியம் சீராகும்.

கன்னி
அனைத்து காரியங்களிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்தாலும் பொறுப்புகள் கூடும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். உற்சாகமான நாளாக அமையும்.

துலாம்
திட்டமிட்டபடி வேலைகளை முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும் என்பதால் சேமிப்பு உயரும். சுப விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையும். கணவன் மனைவி இடையே புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

விருச்சிகம்
மனதில் தெளிவும் துணிச்சலும் பிறக்கும் நாளாக இருக்கும். தொழில் போட்டிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிட்டும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மனநிறைவைத் தரும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

தனுசு
பொருளாதார நெருக்கடிகள் நீங்கிப் பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யச் சாதகமான சூழல் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. உறவினர்கள் உங்கள் ஆலோசனைகளை நாடுவார்கள். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்.

மகரம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் இனிய நாளாக அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கப் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். வங்கி உதவி எளிதாகக் கிடைக்கும்.

கும்பம்
தைரியமாக முக்கிய முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவுவார்கள். வருமானம் உயரப் புதிய வழிகள் தென்படும். கலைத்துறையினருக்குச் சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். சுப செய்திகள் வந்து சேரும்.

மீனம்
மற்றவர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு லாபம் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை ஏற்பார்கள். நிலுவையில் இருந்த காரியங்கள் விரைந்து முடியும். குடும்ப ஒற்றுமை பலப்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Rasipalan Today | இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் வேலை, பணம், ஆரோக்கியம், குடும்பத்தில் இன்று என்ன பலன் என்பதை அறியலாம்.

Video