செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக மதிவதனி பரப்புரை…

கோவை: கோவை தெற்கு தொகுதியை செந்தில் பாலாஜி பெறுவது தான் அவரது உழைப்பிற்கான அங்கீகாரமாக இருக்கும் என்று மதிவதினி தெரிவித்துள்ளார்

Advertisement

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் மதிவதனி இன்று ராமநாதபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்பொழுது மக்கள் மத்தியில் பேசிய அவர், குழந்தைகள் படித்து பட்டம் பெற்று சுயமரியாதையுடன் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் உதயசூரியன் என்ற சின்னத்தை தவிர வேறு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.

தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்த ஒரே ஒரு முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்றார். பெண்கள் வீட்டிற்கு சென்று சமைக்க வேண்டும், ஆனால் ஆண்களுக்கு கவலை இல்லை வீட்டிற்கு சென்றால் எடுத்து வைத்திருப்பார்கள் சாப்பிட்டு கொள்ளலாம் என்றார். பெண்கள் என்றாலே உழைக்க கூடியவர்கள் தான் என்றும் உங்கள் கணவர் யாராவது நீங்களை உணவை பாராட்டி உள்ளார்களா? அப்படி யாரும் சொல்ல மாட்டார்கள் என்றார்.

Advertisement

மகளிருக்கான உழைப்பை அங்கீகரித்து 1000 ரூபாய் கொடுத்தது மு.க.ஸ்டாலின் தான் என்றார். மேலும் மீண்டும் திமுக ஜெயித்தால் 2000 ரூபாய் வழங்கப்படுவதாக திமுக அறிவித்துள்ளது என்றார். பெண்களுக்கு கணவரை நேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு இல்லை, பிடித்த உணவை சாப்பிடுவதற்கும் வாய்ப்பு இல்லை என கூறிய அவர், உலக வரலாற்றில் முதன்முறையாக பெண்கள் கையில் சாய்ஸ் கொடுக்கப்படுவதாக 8000 ரூபாய் கூப்பன் திட்டத்தை சுட்டிகாட்டினார். இதற்கு முன்பு இருந்த அரசு யாராவது பெண்கள் பற்றி பேசியுள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பினார். மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய இருப்பது பெண்களால் தான் என்றும் கூறினார்.

இங்கு இத்தனை பேர் இருந்தாலும் ஜாம்பி மாதிரி எதுவும் ஏறிவரவில்லை, ஏறி குதித்து யாரும் வரவில்லை, அய்யய்யோ என்று நினைக்கவில்லை என்றால் இது கருப்பு சிவப்பு படையாக இருப்பது தான் என்றார்.

Advertisement

செந்தில்பாலாஜிக்கு கோவை தெற்கு தொகுதி உறுதியானதில் இருந்து எதிரணியில் ஆட்கள் இல்லை என்றும் எதிர் கட்சியினரை விமர்சித்தார். கோவை தெற்கு தொகுதியை செந்தில் பாலாஜி பெறுவது தான் அவரது உழைப்பிற்கான அங்கீகாரமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கூட்டணி கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...