கோவையில் 3 வருட பழைய சரக்கு விற்பனை! வீடியோ காட்சிகள் வைரல்

கோவை: கோவையில் 3 வருட பழைய சரக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சாட்டும் ‘குடிமகன்’ ஒருவரின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Advertisement

உணவுப் பொருட்களுக்கு மட்டுமல்லாமல், மதுபானங்களுக்கும் அதன் பாட்டிலில் காலாவதி தேதி அச்சிடப்பட்டே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை டாஸ்மாக் பாரில் 3 ஆண்டுகள் பழைய மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக வெளியான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடாகம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் ஒருவர் மதுபாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் காலாவதி தேதியை பார்க்காமல் மதுவை குடித்ததாக தெரிகிறது.

Advertisement

இதனிடையே திடீரென அவர் மதுபாட்டிலை பார்த்தபோது, அதில் அந்த மது 19/06/2023 அன்று தயாரிக்கப்பட்டதாக அச்சிடப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவரது கேள்விக்கு பதில் சொல்லாமல், பாட்டிலை உடைத்து குடித்துவிட்டதால் அதற்கு பணத்தை திருப்பித் தர முடியாது என்று கூறியுள்ளனர்.

Advertisement

இப்படி பழைய சரக்கை கொடுத்து எங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்று கடையில் நின்று அவர் புலம்பும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் ஜனநாயகன் படம் பார்த்த அமைச்சர்கள் அழுகை! – VIDEO

கோவையில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த அமைச்சர்கள் சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...