கோவையில் வெடித்துச் சிதறிய டிரான்ஸ்பார்மர் – வீடியோ

கோவை: கோவையில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியதால் அங்கிருந்த மதுப் பிரியர்கள் காயமடைந்தனர்.

Advertisement

ரத்தினபுரியை அடுத்த கண்ணப்ப நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே மின்வாரிய டிரான்ஸ்பார்மர் இருந்தது.

இதனிடையே அந்த டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அதில் திடீரென தீப்பிடித்தது. அப்போது அங்கிருந்த மதுப் பிரியர்கள் சுதாரிப்பதற்குள் டிரான்ஸ்பார்மர் முழுவதும் தீ பரவி, திடீரென வெடித்துச் சிதறியது.

அப்போது அதில் இருந்த ஆயில் சிதறி, அருகில் நின்றிருந்த மதுரை வீரன் உட்பட மூவர் மீது விழுந்ததில் அவர்கள் காயமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

Advertisement

தகவலின் பேரில் அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள், அந்த மின் இணைப்பைத் துண்டித்து, அதை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் ரத்தினபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 4 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...