கோவை: கோவையில் நேற்று எங்கு எவ்வளவு மழை பெய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை தொடர்பான அறிக்கையை பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. இதில் வால்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ள நிலையில், சமவெளிப் பகுதிகளில் பெரும்பாலும் மழை பதிவாகவில்லை.
பகுதிவாரியாக பதிவான மழை விவரம் (மில்லி மீட்டரில்):
- பி.என்.பாளையம் – 0.00 மி.மீ.
- மேட்டுப்பாளையம் – 0.00 மி.மீ.
- பில்லூர் அணை – 0.00 மி.மீ.
- அன்னூர் – 0.00 மி.மீ.
- கோவை தெற்கு தாலுகா – 0.00 மி.மீ.
- சூலூர் – 0.00 மி.மீ.
- வாராப்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகம் – 0.00 மி.மீ.
- தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் – 0.00 மி.மீ.
- சிறுவாணி அடிவாரம் – 6.00 மி.மீ.
- மதுக்கரை தாலுகா – 0.00 மி.மீ.
- போத்தனூர் ரயில் நிலையம் – 1.00 மி.மீ.
- பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் – 2.00 மி.மீ.
- மாக்கினாம்பட்டி பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் அலுவலகம் – 0.00 மி.மீ.
- கிணத்துக்கடவு தாலுகா – 0.00 மி.மீ.
- ஆனைமலை தாலுகா – 0.00 மி.மீ.
- ஆழியாறு – 0.00 மி.மீ.
- சின்கோனா – 15.00 மி.மீ.
- சின்னக்கல்லார் – 26.00 மி.மீ.
- வால்பாறை பி.ஏ.பி. – 14.00 மி.மீ.
- வால்பாறை தாலுகா – 12.00 மி.மீ.
- சோலையாறு – 33.00 மி.மீ.
விமான நிலையம் பீளமேடு மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மழை அளவையர் நிலையங்களில் மழை விவரம் பெறப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: கோவையில் ஜூன் 8-ஆம் தேதி மின்தடை பகுதிகள்…
மொத்தமாக கோவை மாவட்டத்தில் 109.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 4.74 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.


