இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி- விவரங்கள் இதோ…

கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

Advertisement

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் 3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் மேலும் திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது.

Advertisement

தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத்தொகை தாட்கோவால் ஏற்கப்படும். இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப காலமாத ஊதியமாக சுமார் ரூ.15000/- முதல் ரூ.25,000/வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணைய தளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.