கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் COAD Club 2026 துவக்க விழா

கோவை: கோவை PSG சுகாதார அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (PSG IMSR), போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் சமூகத்தில் பரப்பும் நோக்கில் COAD Club 2026 (Club of Anti-Drug) துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் டாக்டர் ஆர். நிர்மலா, IPS தலைமை தாங்கி COAD Club 2026-ஐ தொடங்கி வைத்தார். மேலும், உலக சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு திட்டத்தின் நிறுவனர் திரு. ஜி. விஷ்ணுபிரசாத் கலந்து கொண்டு மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Also Read: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அவலம்; வனவிலங்கு தண்ணீரை வடிகட்டி குடிக்கும் பழங்குடியினர்!

நிகழ்ச்சியின் போது போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், சமூக பாதிப்புகள் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்களின் பங்களிப்புடன் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Advertisement

இதன் ஒரு பகுதியாக,

  • COAD Club Branding Team அறிமுகம்
  • Image Safety Awareness Leaflet வெளியீடு
  • போஸ்டர் போட்டி பரிசளிப்பு விழா
  • வீதிநாடக (Street Play) விழிப்புணர்வு குழு அறிமுகம்

ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் PSG SHIELD செயலி (App) அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர் டாக்டர் ஆர். நிர்மலா, மாணவர்கள் தங்கள் வாழ்க்கை இலக்குகளை நோக்கி கவனம் செலுத்த வேண்டும் என்றும், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Also Read: வீட்டு வாசலில் போதையில் கிடந்த மர்ம நபர்; ஒரு மணி நேரம் அச்சத்தில் தவித்த தாய், மகள்கள்!- வீடியோ

நிகழ்வின் போது மாணவர்களுக்காக போதைப்பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் சமூக விழிப்புணர்வு தொடர்பான விளக்கக்காட்சி (PowerPoint Presentation) வழங்கப்பட்டது.

PSG சுகாதார அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த முயற்சி, மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பொறுப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய முன்னெடுப்பாகவும் பாராட்டப்படுகிறது.

“போதை இல்லா இளைஞர்களே நாட்டின் பலம்” என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Latest News Coimbatore

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...