குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தவருக்கு நேர்ந்த விபத்து- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவை கோவில்மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று குழந்தைகளுடன் பேசி கொண்டிருந்தவர் மீது மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகர் கோவில் மேடு பகுதியில் ஆட்டோ ஒன்று சாலையோரம் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

கோவில் மேடு பகுதியில் பிரதான சாலையை தவிர்த்து இணைப்புச் சாலைகள் மிகவும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் நிலையில் நேற்று மாலை அவ்வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்பொழுது சாலை ஓரம் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்த ஒருவர் மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ மோதிய நபர் மயங்கிய நிலையில் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்தனர்.

மேலும் இந்த விபத்தில் ஆட்டோ எதிர்புறம் நின்று கொண்டிருந்த மற்றொரு ஆட்டோ மீது மோதி சாய்ந்தது. ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவிலேயே சிக்கிக்கொண்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் ஆட்டோவை நிமர செய்து அவரையும் மீட்டனர்.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும் சிறு காயங்களுடன் உயர் தப்பி உள்ளார். தற்பொழுது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்…

கோவை: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (23.06.2026) செவ்வாய்க்கிழமை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கோயம்புத்தூர்...

Latest News Coimbatore

Video

நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த யானைகள்- கோவையில் நடந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வைரல்…

கோவை: கோவை பூண்டி செம்மேடு சாலையில் உலா வந்த 2 காட்டு யானைகள் நாய்கள் குரைத்ததால் ஓட்டம் பிடித்த காட்சிகள் வைரலாகி வருகிறது கோவை மாவட்டம், ஆலாந்துறை அடுத்த பூண்டி செம்மேடு பிரதான சாலையில்...