கோவையில் இந்தவார வானிலை; 5 நாட்கள் மழை!

கோவை: கோவையில் இந்த வாரத்திர வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கோவையில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் கனமழைக்கும், இரண்டு நாட்கள் லேசான மழைக்கும், ஒரு நாள் மிதமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மாவட்டத்தில் இன்றும் (மார்ச் 30, 31) நாளையும், குறைந்தது 38 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி, கோவையில் அதிகபட்சம் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என்றும், இந்த நாளில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கோவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களிலும் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம்.

ஏப்ரல் 4ம் தேதி கோவையில் மிதமான மழைக்கும், ஏப்ரல் 5ம் தேதி லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகவும், இந்த நாளில் குறைந்தது 24 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

எனவே கோவையில் நாளை மறுநாள் வெப்பம் 3 டிகிரி வரை குறைய வாய்ப்புள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

5 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த தர்மர்…

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டது 5 பேர் மறுவாழ்வு பெற்றனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, செங்குட்டை நாராணாபுரம் பகுதியைச் சேர்ந்த தர்மர் (46) என்பவர்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...