கோவையில் மசாலா பொடிகள், ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி 08.07.2026 மற்றும் 09.07.2026 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்பட உள்ளது.

Advertisement

இதில் மசாலா பொடிகள் (சாம்பார் பொடி, ரசப்பொடி, கறிமசால் பொடி, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா பொடி), தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் ஆகிய பயிற்சிகள் அளிக்கபட உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1,500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும். (ரொக்கம் இல்லை, GPAY மட்டும்).

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம்,
வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003.
தொலைபேசி எண் – 94885 18268, 0422 6611340 ஆகும்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஒடிசா வாலிபருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை- இருவர் கைது…

கோவை: ஒடிசா வாலிபருடன் சேர்ந்து கோவையில் கஞ்சா விற்ற வாலிபர் உட்பட 2 பேரை போலிசார் கைது செய்தனர்.​ கோவை, குப்பிச்சிபாளையம் ரயில்வே பாலம் அருகே சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா மாநில...

Latest News Coimbatore

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.