கோவையில் மாணவர் உயிரிழப்பு: சாதியப் பாகுபாடு புகார் – ஆசிரியர் கைது!

கோவை: கோவை பீளமேட்டில் 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், சாதியப் பாகுபாடு புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமை ஆசிரியரையும் கைது செய்யக் கோரி பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பீளமேடு ஏ.டி. காலனியைச் சேர்ந்த அசோக்குமார் – கௌசல்யா தேவி தம்பதியினரின் மகன் அகிலன் (16). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு நேத்ரா என்ற சகோதரியும் உள்ளார்.

Advertisement

இந்நிலையில், மாணவர் அகிலனின் சாதியை அறிந்த சக மாணவர்கள் அவரை ஒதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆசிரியர் ஒருவர் மாணவரிடம் “மாட்டுக்கறி சாப்பிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வழக்கம்போல் பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட அகிலன், பள்ளிக்குச் செல்லாமல் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியதாகத் தெரிகிறது. குடும்பத்தினர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், மாணவர் வீட்டில் உயிரிழந்தார்.

Advertisement

மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த அவரது தந்தை அசோக்குமார், மகன் உயிரிழந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார், மாணவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவரின் மரணம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் விஜயகுமார், தலைமை ஆசிரியர் அருண்குமார் மற்றும் சக மாணவர்கள் இருவர் என நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆசிரியர் விஜயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் அருண்குமாரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களைக் காட்ட வேண்டும் என்றும், தலைமை ஆசிரியரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, மாணவரின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பீளமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

மாணவரின் மரணம் மற்றும் சாதியப் பாகுபாடு தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மழை பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு- கோவை மாநகராட்சி நிர்வாகம்…

கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...