கார்த்திகா வெளியே வந்தார்! கோவை சிறை வாசலில் நாம் தமிழர் கட்சியினர் உற்சாக வரவேற்பு!

கோவை: முதல்வர் விஜய் வருகையின்போது போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 9 பேர், நீதிமன்ற ஜாமீனில் கோவை மத்திய சிறையிலிருந்து வெளியே வந்தனர். அவர்களுக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக முதல்வர் விஜய் கடந்த 4-ம் தேதி அங்கு சென்றிருந்தார்.

Advertisement

அப்போது நடைபெற்ற சாலை மறியல் மற்றும் காவல் நிலைய முற்றுகை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார், கட்சி நிர்வாகிகள் இசை மதிவாணன், கந்தசாமி, சூர்யா, சஞ்சய் காந்தி, விக்னேஷ், ஷேக் பரித் உள்ளிட்ட 12 பேரை தாராபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 12 பேரும் ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

Advertisement

விசாரணையின் முடிவில், கார்த்திகா, அவரது கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய நாகர்கோவிலைச் சேர்ந்த வெங்கடேஷ், சென்னையைச் சேர்ந்த கோகுல், கோவையைச் சேர்ந்த மோகன் பிரசாத் ஆகிய மூவரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகா உள்ளிட்ட 9 பேரும் கோவை மத்திய சிறையிலிருந்து இன்று வெளியே வந்தனர்.

Advertisement

அவர்களை வரவேற்பதற்காகச் சிறை வாசலில் திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...