கோவை: வடகிழக்கு பருவமழையையொட்டி மழைநீர் தேக்கம், மழைநீர் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையையோட்டி, மழைநீர் தேக்கம் மற்றும் மழைநீர் தொடர்பான பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார்கள் அளிக்க 8190000200 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகம் மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையோட்டி, அண்மையில் பெய்த கனமழையினால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில், மாநகராட்சி சார்பில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா அறிவுறுத்தலின்படி, அனைத்து மண்டல அலுவலர்கள் தலைமையில் களப்பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு நிவாரண பணிகளை மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ICCC) மூலம் மாநகராட்சிப் பகுதிகள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் ஏற்படும் மழைநீர் தேக்கம் உள்ளிட்டவைகள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாநகராட்சி சார்பில், 8190000200 என்ற வாட்ஸ்அப் எண் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன் மூலம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தீர்வுகாணப்படும்.
மேலும், வடகிழக்கு பருவமழையையொட்டி, கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும், பொதுமக்கள், மழை தொடர்பான புகார்களை எளிதாக தெரிவிக்கும் வகையில், மண்டல கட்டுப்பாட்டு எண்களான கிழக்கு மண்டலத்தில், 0422-2577217 என்ற எண்ணிலும், வடக்கு மண்டலத்தில், 04222243133 என்ற எண்ணிலும், மேற்கு மண்டலத்தில், 0422 2553100 என்ற எண்ணிலும், தெற்கு மண்டலத்தில், 0422-2252705 என்ற எண்ணிலும், மத்தியமண்டலத்தில், 0422-4709525 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு, புகார்களை தெரிவிக்கலாம் என மாநகராட்சி சார்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.






