கோவையில் உள்ள ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை தேதி காலம் நீட்டிப்பு…

கோவை: கோவை ஐடிஐ தொழில்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர் (மகளிர்) ஆனைக்கட்டி வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள், டிரோன் பைலட், இன்டஸ்ட்ரிஸ் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.

Advertisement

8, 10,11,12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரிடிப்ளமோ படித்த 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் இப்பயிற்சியில் சேர உச்ச வயது வரம்பு இல்லை.

15.06.2026 முதல் 30.06.2026 வரை நேரடி சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில் தற்போது 31.07.2026 வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது சேர்க்கையில் சேர விரும்புவோர் தங்களது 8ம் வகுப்பு பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.

பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், சீருடை, பாடநூல்வரைபட கருவிகள், காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும்மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750-ம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகையும் வழங்கப்படும்.

இப்பயிற்சிக்கான பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம் மற்றும் பயிற்சி முடித்து செல்லும் மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான கோயம்புத்தூர் (81220 47178, கோயம்புத்தூர் (மகளிர்) (97156 26813) ஆனைக்கட்டி (88383 39946), வால்பாறை (94421 75780), பேரூர் (93633 10633) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், கோவை (99522 53597, 94990 55687) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சுற்றுச்சூழலை பாதிக்காத புதிய கண்டுபிடிப்புகள் தற்போதைய தேவை- சுரேஷ்கோபி கோவையில் பேச்சு…

கோவை: தற்போதைய சூழலில் சுற்றுசூழலை பாதிக்காக புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் கோவை...

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...