12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறைதீர் முகாம்…

கோவை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர் முகாம் வருகின்ற 10.07.2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

Advertisement

இம்முகாமில் இவ்வாண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், பதினொன்றாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், உயர்கல்வியில் சேருவதற்கு தேவையான சான்றுகள், அரசு சார்ந்த உதவிகள் மற்றும் அரசு சார்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.

இம்முகாமில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ளவும்மேலும் அரசு ஐடிஐ பாலிடெக்னிக் மற்றும் அரசு கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரிவேளாண் கல்லூரி, துணை மருத்துவம்சட்டம் போன்ற கல்லூரிகள் சார்ந்த சேர்க்கை தவகல்களை பெற்று பயன்பெறவும், கல்விக் கடன் சார்ந்த உதவிகளைப் பெற்றிடவும்,தவறாது இம்முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் முகாமில் பங்குபெறும் மாணவர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைகளான வங்கி கணக்கு புத்தகம், ஆதார், சாதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடும்ப அட்டை போன்றவைகளை தவறாது எடுத்துவர கேட்டுக்கொள்ளப்படுகிறது சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண்கள் : 9487047568, 978885829, 8754898863 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வீட்டு வாசலில் பெண்ணை தாக்கி ரூ.30 ஆயிரம் தங்கச் சங்கிலி பறிப்பு… கோவையில் அதிர்ச்சி!

கோவை காளப்பட்டியில் வீட்டு வாசலில் நின்றிருந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Video

திருமணம் முடிந்த கையோடு மாட்டு வண்டியில் புறப்பட்ட தம்பதி- கோவையில் சுவாரஸ்யம்…

கோவை: கோவையில் புதுமண தம்பதியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த சொலவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் விக்ரம் கோவையை சேர்ந்த விகாஷினி இருவருக்கும் கிணத்துக்கடவு பகுதியில்...