வெங்காய விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சின்ன வெங்காயத்திற்கான விதைப்புக்கு முந்தைய விலை முன்னறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சின்ன வெங்காய உற்பத்தியில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் சின்ன வெங்காயம் மட்டும் கிட்டத்தட்ட 80 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டில் 0.44 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் ஹெக்டேருக்கு சராசரியாக 12 டன் என்ற உற்பத்தித்திறனுடன் 5.28 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது
தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருப்பூர்பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் இதன் முக்கிய உற்பத்திப் பகுதிகளாகும்.

உள்நாட்டுத் தேவை பெரும்பாலும் இப்பிராந்திய உற்பத்தியின் மூலமும். கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து வரும் வரத்துகள் மூலமும் ஈடுசெய்யப்படும்.

Advertisement

அதே வேளையில் தமிழ்நாடு ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாகவும் செயல்பட்டு, இலங்கை, வங்காளதேசம்மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் சந்தைகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களின் படி நடப்பு பருவத்தில் சின்ன வெங்காயத்திற்கு. சர்வதேச அளவில் நல்ல தேவை இருப்பதால் மொத்த வெங்காய உற்பத்தியில் தோராயமாக 5 முதல் 10 சதவீதம் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது பெரம்பலூர், தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் புதிய சின்ன வெங்காய வரத்து, திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வுமையத்தின் ‘உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்’ (DEMIC) கடந்த 15 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலைகளை ஆய்வு செய்து, சந்தை ஆய்வுகளையும் மேற்கொண்டது.

Advertisement

ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.35 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
எனவே. விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் சந்தை விவரங்களுக்கு,
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர் 641003

தொழில்நுட்ப விவரங்களுக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர்
காய்கறிப் பயிர்கள் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்- ஐ தொடர்பு கொள்ளவும்

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

டெத் ரேஸ் சாகசம் செய்த ஜென்-ஜி இளைஞர்கள் கைது!- மன்னிப்பு கோரிய வீடியோ

டெத் ரேஸ் பாணியில் காரின் மேற்கூரை மற்றும் ஜன்னல் வழியே ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 இளைஞர்களை கிணத்துக்கடவு போலீசார் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...