ரேசன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு செய்ய மீண்டும் வாய்ப்பு…

கோவை: ரேசன்கடைகளில் நாளை கைவிரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் நடைபெற உள்ளது.

Advertisement

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 95.82 சதவீதமும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 88.65 சதவீதமும் கைவிரல் ரேகை பதிவு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி மேற்படி கைவிரல் ரேகை eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் 02.08.2026 அன்று சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதால் குடும்ப அட்டைதாரர்களின் குடும்பங்களில் கைரேகை பதிவு விடுப்பட்டுள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்கோ அல்லது அருகிலுள்ள நியாய விலைக்கடைக்கோ சென்று கைவிரல்ரேகை பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 100% eKYC பணியினை நிறைவு செய்ய உறுதுணை செய்யுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிப்பு…

கோவை: பிறப்புச் சான்றிதழில் பெயரை சேர்ப்பதற்கான கடைசி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவாளர் தலைமை அலுவலரின் அறிவிப்பின்படி, 01.01.2000-க்கு முன்னும் பின்னும் பதிவு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...