கோவை செம்மொழி பூங்காவில் அமைச்சர் சம்பத்குமார் திடீர் ஆய்வு…

கோவை: கோவை செம்மொழி பூங்காவில் ஆய்வு மேற்கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்டார் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார்.

Advertisement

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள செம்மொழி பூங்கா தற்பொழுது கோவையின் முக்கியமான பொழுதுபோக்கு இடமாக மாறியுள்ளது. அனைத்து நாட்களிலும் குடும்பங்களுடன் பொதுமக்கள் வருகை புரிந்து செம்மொழி பூங்காவை பார்வையிட்டு செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை தினங்களிலும் விசேஷ நாட்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.

இங்கு பல்வேறு வகையான செடி கொடிகள், பூச்செடிகள், தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் கற்சிலைகள் செயற்கை நீரூற்று ஆகியவை உள்ளது. அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கான விளையாடும் இடம் ஆகியவையும் உள்ளன.

இன்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். செம்மொழி பூங்காவை சுற்றி பார்வையிட்ட அவர் அங்குள்ள குடிநீர் வசதிகள் நடைபாதை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார் மேலும் அங்குள்ள அலுவலர்களிடம் என்னென்ன தேவைகள் தேவைப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அங்கு உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற அவர் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விமான நிலையத்தில் இ சிகரெட், தங்கம் கைப்பற்றல்…

கோவை: ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணியிடம் தங்கம் மற்றும் மின்னணு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...