இந்த அரசு கருணை காட்டாது- அமைச்சர் அருண்ராஜ் குறிபிட்ட விஷயம்…

கோவை: உறுப்பு மாற்று சிகிச்சையில் தவறு செய்தால் இந்த அரசு கருணை காட்டாது என நாமக்கல் கிட்னி திருட்டை குறிபிட்டு அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்துள்ளார்.

Advertisement

கோவை அவிநாசி சாலையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பங்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்பலகை திறந்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ் பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர் பலகையை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்வில் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அருண்ராஜ் இந்த நிகழ்வு எமோசனாக உள்ளது என்றார். எத்தனையோ நிகழ்ச்சியை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்துள்ளோம் ஆனால் இன்று இந்த நிகழ்வில் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர் பலகையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தது நெகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் நிகழ்ந்து வருகிறது, தினம் தோறும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்கள் இருக்கும் போதும் இத்தனை மனித நேய மனிதர்களை பார்க்கும் போது உலகம் இன்றளவும் இயங்குகிறது என்றார்.

Advertisement

உறுப்பு தானம் என்பது மிகபெரிய விஷயம் என்று கூறி “நல்லார் ஒருவர் உலகேல் அவர்பொருட்டு பெய்யும் மழை” என ஒளவையாரின் பாடலை குறிபிட்டார். தமிழ்நாடு வறட்சியாக உள்ளது விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் ஆனால் தற்போது கர்நாடகாவில் மழை பெய்து வருகிறது என்ற அவர் நல்லவர்களால் தான் மழை பெய்து வருகிறது இந்த மனித நேய நம்பிக்கையை இழக்க அரசும் இது போன்று நிறுவனங்களும் செய்து விட கூடாது என்றார்.

உடல் உறுப்பு தானம் குறித்தான விழிப்புணர்வை விரிவு படுத்த வேண்டும் என்றும் 3ல் 1 பங்கு தான் உடல் உறுப்பு மாற்றம் செய்யப்படுகிறது என்றும் கூறிய அவர் இது தேவையை விட குறைவு தான் அடுத்த 15 ஆண்டுகளில் உறுப்பு தானம் தேவை 15% அதிகமாகும் என கூறுகிறார்கள் என்றார்.

Advertisement

நாமக்கல் கிட்னி திருட்டு பிரச்சனைக்கு பிறகு உறுப்பு மாற்ற நடவடிக்கை செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது என்றும் ஒரு சிலர் செய்யும் தவறால் இது போன்ற செயல்கள் பாதிக்கப்படுகிறது, மருத்துவ சிகிச்சை தடை ஏற்படுகிறது என்றும் இந்த அரசில் ஏதேனும் தவறு செய்தால் எந்த கருணையும் காட்டப்படாது என்றார்.

இந்தியாவில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் சாலை விபத்தால் இளம் வயதினர்களை அதிகமாக இழக்கிறோம் என்றும் எனவே
சாலை விபத்து பகுதிகளில் அருகில் உள்ள கடைக்காரர்களுக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றார்.

நாளை டெல்லியில் விருது வாங்க செல்கிறேன் என்ற அவர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது அதற்காக விருது வழங்கப்ப்ட உள்ளது அந்த விருதினை அந்த குடும்பத்தினருக்கு சமர்பிக்கிறேன் என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது அதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறுகிறது நாளை அதற்காக செல்கிறேன்அந்த விருதினை கொடையாளர்களின் குடும்பத்தினருக்கும் கொடையாளர்களுக்கும் காணிக்கையாக செலுத்துகிறேன் என்றார்.

மூளை சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்யலாமா வேண்டாமா உடல் உறுப்பு தானம் செய்தால் அந்த உடல் உறுப்பு சிதைந்து விடும் ஏதாவது ஆகிவிடும் என்ற தவறான புரிதல் சிலரிடம் உள்ளது என்றார். உடல் உறுப்பு தானம் குறித்தான புரிதலை நாம் உருவாக்க வேண்டும் என்றும் உடல் உறுப்பு தானம் அதிகளவு நாம் தமிழகத்தில் செய்தாலும் அதற்கான தேவை கூடுதலாகவே உள்ளது என்றார்.

சாலை விபத்துகளில் இளம் உயிர்களை அதிகமாக இழக்க கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது
எனவே எந்தப் பகுதிகளில் அதிக விபத்துகள் நிகழ்கிறதோ அந்த பகுதிகளில் உள்ள மக்களிடம் அல்லது கடைக்காரர்களிடம் முதலுதவி சிகிச்சை பயிற்சி வழங்குவதற்கான திட்டத்தை அறிவிக்கப் போகிறோம் என்றார்.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் இரண்டு மாதத்தில் வந்தது இல்லை நீண்ட நாள் நிர்வாக சீர்கேட்டால் சாக்கடை வசதிகள் எதுவும் அமைக்காததால் எலிகளை கட்டுப்படுத்தாததால் வந்தது, நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு முயற்சியாக நாம் செய்து வருகிறோம் என்றார்.

இந்த அரசு நேர்மையான அரசு ஊழலற்ற லஞ்சம் அற்ற அரசை கொடுக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் லட்சியம் என்றும் மருத்துவமனையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் ஊழியர்கள் நோயாளிகள் இடமும் அவர்களது உறவினர்களிடமும் பணம் வாங்குவது தொடர்பாக புகார் வந்து கொண்டு தான் இருக்கிறது, லஞ்சம் வாங்குவதை இந்த அரசால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது
பணியாளர்கள் இதனை ஒரு சேவையாக தான் செய்ய வேண்டும் ஏழை மக்கள் தான் அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள் என்றார்.

அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம் தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உள்ளது அதன் வரம்பை இன்னும் விரிவுபடுத்துவதற்கான ஆய்வுகளை செய்து வருகிறோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தான்ம் செய்தவர்களின் வீடியோ ஒளிபரப்பு செய்யும் போது அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுத்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பொள்ளாச்சி அருகே கோர விபத்து- ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: பொள்ளாச்சி அருகே அரங்கேறிய பயங்கர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே நிகழ்ந்த கோர சாலை விபத்தில் லாரி மீது கார் மோதியதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...