தவறி விழுந்த மயில் குஞ்சு- பத்திரமாக மீட்ட மீட்புப் பணித்துறையினர்…

கோவை: தவறி விழுந்த மயில் குஞ்சை பத்திரமாக மீட்ட மீட்புப்பணி துறையினர்.

Advertisement

கோவையில் BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே தவறி விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கி வருகிறது. பிஎஸ்என்எல் அலுவலக கட்டிடத்தின் வெளிப்புறம் உள்ள ஜன்னல் மேல் இடுக்கில் பெண் மயில் ஒன்று நான்கு குஞ்சுகளை ஈன்று பாதுகாத்து வருகிறது. இன்று ஒரு மயில் குஞ்சு தவறி ஜன்னல் ஸ்லாப்பில் விழுந்துள்ளது.

பெண் மயிலும் அதனை காப்பாற்ற முயன்ற நிலையில் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் பத்திரமாக மயில் குஞ்சை மீட்டு மீண்டும் ஜன்னல் இடுக்கில் மற்ற குஞ்சுகளுடன் சேர்த்தனர்.

Advertisement

இதனை அடுத்து அந்த பெண்மயில் பிஎஸ்என்எல் அலுவலகம் மாடியில் சுற்றித்திரிந்தவாறு வேறு எந்த பறவையும் வராத வண்ணம் பாதுகாத்து வருகிறது.

பொதுமக்கள் யாரும் அதன் அருகில் செல்ல வேண்டாம் என்று தீயணைப்பு மீட்பு பணி துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

உதயநிதி ஸ்டாலின் கைது சரியே- புகழேந்தி பேட்டி…

கோவை: உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் என தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது எனக்கு...

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை: வாடிக்கையாளர் போல் வந்து ஐஃபோனை களவாடிய பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து, கடையில் இருந்த ஐபோனை (iPhone 13) நைஸாகப் பேண்ட் பாக்கெட்டில்...