கோவையில் பயங்கரம்! அண்ணனைக் கொன்று கிணற்றில் வீசிய தம்பி, நண்பர் கைது

கோவை: கோவை அருகே அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து, சடலத்தை பாழடைந்த கிணற்றில் வீசியதாக தம்பி மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை சமநாயக்கன்பாளையம் ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி இரவு, செந்தில்குமாருக்கும் அவரது தம்பி சம்பத்குமார் (42) என்பவருக்கும் இடையே வீட்டில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சம்பத்குமார், தனது நண்பரான ஆனந்தகுமார் (24) என்பவருடன் சேர்ந்து செந்தில்குமாரை தாக்கியதுடன், கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

Also Read: கோவையில் நூதன மோசடி! போலி GPay காட்டி தப்பிய வாலிபர்- Viral video

Advertisement

இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து அவரது உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, வெள்ளமடை பகுதியில் உள்ள தரிசு நிலத்தில் அமைந்திருந்த பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு தப்பியுள்ளனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த செந்தில்குமாரின் தாய் சரஸ்வதி, அச்சமடைந்து தனது மருமகள் மற்றும் பேரனுடன் கீரணத்தத்தில் உள்ள மகள் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனிடையே, ஆகஸ்ட் 6-ஆம் தேதி ஆண்டாள் நகர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார், அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டனர்.

சடலம் தனது மூத்த மகன் செந்தில்குமார் என்பதை அவரது உடைகளை வைத்து தாய் சரஸ்வதி அடையாளம் காட்டினார்.

Also Read: போதைப்பொருளுக்கு எதிராக கோவை போலீசார் நடத்திய மாரத்தான்; குவிந்த மக்கள்!

இதுகுறித்து வெள்ளமடை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் போலீசாரின் விசாரணையில் இது கொலை என்பது தெரியவந்ததை தொடர்ந்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், செந்தில்குமாரை கொலை செய்ததாக அவரது தம்பி சம்பத்குமார் மற்றும் அவரது நண்பர் ஆனந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் நூதன மோசடி! போலி GPay காட்டி தப்பிய வாலிபர்- Viral video

கோவை மதுக்கரையில் போலியான GPay ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டி துணி மற்றும் ரூ.1,500 ரொக்கப் பணம் என மொத்தம் ரூ.2,150 மோசடி செய்த வாலிபர் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.