கோவை: சந்தோஷ் டிராபி தொடரில் தமிழ்நாட்டிற்காக விளையடிய கால்பந்து வீரர் கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சந்தோஷ் டிராபி தொடரில் 2013ம் ஆண்டு தமிழ்நாட்டுக்காக விளையாடிய கால்பந்து வீரர் அசீம்கொரளையாடன் (40) கோவையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
கேரளா மாநிலம் மலப்புறம் அரிக்கோடு புத்தலம் பகுதியை சேர்ந்தவர் அசீம் கொரளையாடன்(40). கோவை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இன்று காலை சித்ரா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து போக்குவரத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து பீளமேடு காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறை அவரது உடலை மீட்டு ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
இவர் அவரது இளம் வயதில் பல்வேறு கால்பந்து விளையாட்டு போட்டிகளில் விளையாடி உள்ளார் சந்தோஷ் டிராபி தொடரில் தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிக்கும் விளையாடி உள்ளார். இவரது இழப்பு விளையாட்டு ரசிகர்கள் மத்தியிலும் அவரது உறவினர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




