30ம் தேதி பேருந்துகள் ஓடாது- தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு…

கோவை: வெற்றிப் பயணம் திட்டத்தில் தங்களையும் இணைக்க வலியுறுத்தியுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள், தங்களது கோரிக்கையை அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

அக்டோபர் 2-ஆம் தேதி தமிழ்நாடு அரசு சார்பில் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், மகளிர் தற்போது நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்வதைப் போலவே, மாவட்டங்களுக்கு இடையேயான குறிப்பிட்ட பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம்.

இந்தத் திட்டம் பொதுமக்கள் மற்றும் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதே சமயம், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே, ஒரு சில தனியார் டிராவல்ஸ் சங்கத்தினர், ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட வாகன உரிமையாளர்கள், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும் என்று கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களது தொழில் பாதிக்கக்கூடும் என்றும், இந்தத் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், இதில் தங்களையும் இணைத்து அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதனை வலியுறுத்தி ஒரு நாள் வேலைநிறுத்தத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

இது குறித்து, இச்சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் துரைக்கண்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 7,000-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பேருந்துகள் கூட 50 ஆண்டுகளாகத்தான் இயக்கப்பட்டு வருகின்றன, ஆனால் தனியார் பேருந்துகள் 100 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்தத் திட்டம் குறித்து தங்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல், வெற்றிப் பயணம் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கது என்றாலும், தனியார் பேருந்துகளையும் இதில் இணைத்து, அரசுப் பேருந்துகளுக்கு வழங்கப்படும் மானியத்தைப் போலவே தனியார் பேருந்துகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Advertisement

இந்தத் திட்டம் தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் என்று தெரிவித்த அவர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அக்டோபர் 2-ஆம் தேதிக்குப் பிறகு தனியார் பேருந்துகளையே இயக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் என்று தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளையும் இந்தத் திட்டத்தில் இணைத்து அரசு செயல்படுத்தினால், பொதுமக்கள் அரசுப் பேருந்துகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நேரம் குறையும் என்றும், இது மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தங்களது இந்தக் கோரிக்கையை அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில், நாளை 29-ஆம் தேதி இரவு 12 மணி முதல் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை தனியார் பேருந்துகளை இயக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் தேசிய அளவிலான ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’! கரடுமுரடான பாதையில் சீறிப்பாய்ந்த பைக்குகள்

கோவையில் ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’ ஆஃப்-ரோடு பைக் ரேஸ் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...