வடக்கன்ஸ் அலப்பறைகள்; காளப்பட்டியில் நடுரோட்டில் ரகளை ! வைரல் வீடியோ

கோவை : கோவை காளப்பட்டி நேரு நகர் பகுதியில் மது போதையில் சிலர் சாலையில் வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement

கோவை மாவட்டத்தில் உள்ள குறுந்தொழில் மற்றும் ஆடை நிறுவனங்களில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை செய்து வரும் இவர்களுக்கு நிறுவனங்களின் நடைமுறைக்கு ஏற்ப வாரந்தோறும் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காளப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் சில தொழிலாளர்கள் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மதுபோதையில் நேரு நகர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மேலும், அந்த குழுவைச் சேர்ந்த சிலர் ஒருவருக்கொருவர் சத்தம் போட்டு தகராறில் ஈடுபட்டதுடன், தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement

சாலையில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இதற்கிடையே, பண்டிகைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ள வடமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் கோவைக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக குறுந்தொழில் முனைவோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, உற்பத்திப் பணிகள் பாதிக்கப்படுவதுடன், குறிப்பிட்ட காலத்துக்குள் ஆர்டர்களை முடிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் தகராறில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் தேசிய அளவிலான ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’! கரடுமுரடான பாதையில் சீறிப்பாய்ந்த பைக்குகள்

கோவையில் ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’ ஆஃப்-ரோடு பைக் ரேஸ் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...