கோவை: கோவையில் HIV குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் சார்பில், எச்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகும் ஒருங்கிணைந்து இளைஞர் விழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்பட்டு வருவதை தொடர்ந்து. இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் நிகழ்வாக எச்ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியானது மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஆட்டோக்களில் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி, நாட்டுப்புற கலைஞர்களின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.
மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாநகராட்சிப்பகுதிகளிலும் இந்த நாட்டுப்புற கலைக்குழுவானது எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்வினை 12.10.2026 வரை மேற்கொள்ளும்
இக்கலைக்குழு நாட்டுப்புற கலைகளின் மூலம் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும்.
பின்னர் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து தொடங்கி வைத்தார்.





