கோவை: வீடுகளின் கேட்டை அசால்ட்டாக திறந்து உள்ள சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை திருவள்ளுவர் நகரில் வீடுகளின் முன்புற கதவுகளை அசால்ட்டாக திறந்து உள்ளே சென்று பார்வையிட்டு சென்ற காட்டுயானையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை தடாகம் பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். நேற்று முன் தினம் இரவு தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிச் சென்ற ஒற்றை காட்டு யானை நேற்று திருவள்ளுவர் நகர் குன்று பெருமாள் கோவில் பகுதியில் சுற்றி திரிந்தது.
அப்பொழுது ஒரு பசு மாட்டையும் தாக்க முயன்றது. இது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அந்த ஒற்றை காட்டு யானையின் மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்த அந்த காட்டு யானை இரண்டு வீட்டுகளின் கேட்டுகளை லாவகமாக திறந்து உள்ளே சென்று நோட்டமிட்டு சென்றுள்ளது.
தற்பொழுது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் உடனடியாக இந்த காட்டு யானையை அடர் வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.





