கோவை: கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் மாணவிகளால் களைக்கட்டியது.
கோவை சுங்கம் பகுதியில் உள்ள நிர்மலா மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கல்லூரி மாணவிகள் அனைவரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு விசேஷ உடை அணிந்து வந்து ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை உற்சாகமாக கொண்டாடினர்.

மாணவிகளே மகாபலி மன்னர் போன்று வேடமிட்டிருந்தனர். கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் அத்தப்பூக் கோலம் போடப்பட்டு மாணவிகள் அனைவரும் அதன் முன்பு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து கல்லூரி அரங்கில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் ஓணம் பாடல்களுக்கு மாணவிகள் கேரள பாரம்பரிய நடனத்தை ஆடினர்.

அதே சமயம் பெண்களுக்கு சீமந்தம் நிகழ்வும் நடன நிகழ்ச்சியாக மாணவிகள் அரங்கேற்றியது நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வாக அமைந்தது.
ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தால் கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டது.





