கோவை: கோவையில் வாடிக்கையாளர் போல் வந்து ஐபோனை திருடி சென்ற பெண் மீண்டும் செல்போனை திருப்பி ஒப்படைத்தார்.
கோவை மாநகர், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் முன்பு உள்ள செல்போன் கடை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடைக்கு வந்த இளம் பெண் ஒருவர்,
செல்போன்கள் வாங்குவது போல நடித்து மேசையின் மீது வைக்கப்பட்டு இருந்த ‘ஐபோன் 13’ போனை திருடி சென்றார்.
இளம்பெண்
ஐபோனை எடுத்துத் தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைத்து திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தத் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், செல்போனை திருடிசென்ற அந்த இளம்பெண் மீண்டும் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து செல்போனை திரும்ப ஒப்படைத்துள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக விலையுயர்ந்த மொபைல் போனை திருடியதாக மன்னிப்பு கேட்ட நிலையில் புகார் எதுவும் கொடுக்காமல் கடை உரிமையாளர் போனை மட்டும் திரும்ப பெற்றுக்கொண்டார்.
கடையில் ஐபோனை திரும்ப ஒப்படைத்த ஒப்படைத்த சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.




