முதியவர்களை குறிவைக்கும் ஆன்லைன் கொள்ளையர்கள்- மக்களே உஷார்

கோவை : கோவை சவுரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 78 வயது முதியவரிடம், கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி மிரட்டி ரூ.1.20 கோடி பணத்தை மர்ம நபர்கள் ஆன்லைன் மூலம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

முதியவரின் செல்போனுக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். மறுமுனையில் பேசிய நபர், முதியவருக்கு கடத்தல் வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், அவரது வங்கி கணக்கு மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும் எனக்கூறி, கணக்கில் உள்ள பணம் முழுவதையும் தாங்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு அனுப்புமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன முதியவர், மர்ம நபர் கூறியபடி சிறிது சிறிதாக பணத்தை அனுப்பியுள்ளார். இவ்வாறு மொத்தம் ரூ.1.20 கோடி வரை அனுப்பியதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், நேற்று மீண்டும் அதே நபர் முதியவரை தொடர்பு கொண்டு மேலும் பணம் கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த முதியவர் தான் ஆன்லைன் மோசடிக்கு ஆளானதை உணர்ந்துள்ளார்.

இதையடுத்து சைபர் கிரைம் இணையதள போர்ட்டல் மூலம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் மர்ம நபர்களின் தொடர்பு விவரங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

அடையாளம் தெரியாத நபர்கள் செல்போனில் அழைத்து வழக்கு, கைது அல்லது வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை கூறி பணம் கேட்டால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரிகள் எனக்கூறி மிரட்டினாலும் பணத்தை அனுப்பக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கு – போக்சோ கோர்ட்டில் பூட்டிய அறையில் வாலிபரிடம் விசாரணை

கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வாலிபரிடம் போக்சோ கோர்ட்டில் பூட்டிய அறையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

Video

குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து...