100 பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்திய எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்…

கோவை: 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தார் கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்.

Advertisement

கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் சார்பில், கோவை வடமதுரை ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்ற சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டதுடன், அவர்களின் நலனை முன்னிறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் கூறியதாவது: சமுதாய வளைகாப்பு என்பது பெண்களுக்கான நிகழ்ச்சி என்று மட்டும் பார்க்கக்கூடாது. கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் மீது மட்டுமல்ல, அவருடைய கணவர் மற்றும் குடும்பத்தினருக்கும் கூடுதல் பொறுப்பு ஏற்படுகிறது.

Advertisement

பொதுவாக 7-வது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில் தாயின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குடும்பத்தினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மனைவியை மட்டும் கவனித்தால் போதாது; வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் கவனிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு இணையாக மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. பெண்களுக்கு மன அழுத்தம் இல்லாத, மகிழ்ச்சியான சூழலை குடும்பத்தினர் ஏற்படுத்தித் தர வேண்டும்.

Advertisement

கணவர்கள் தங்களது மனைவியை நல்ல எண்ணத்தோடும், அன்போடும் கவனித்துக் கொள்ள வேண்டும். சத்தான உணவு வழங்குவது முதல் போதிய ஓய்வு, மருத்துவப் பரிசோதனை, மனநிம்மதி என அனைத்து வகையிலும் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.

மனநிம்மதியான கர்ப்ப காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்க வேண்டும். ஆரோக்கியமான தாயால் தான் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க முடியும்.

பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நலன்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்தும் அனைவருக்கும் என்ற வகையில் மக்கள் நலனை முன்னிறுத்தி மக்கள் முதல்வர் விஜய் அவர்கள் உழைத்து வருகிறார்.

இங்கு பங்கேற்றுள்ள ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணிடமும் தவெக அரசும், மக்கள் முதல்வர் விஜய் அவர்களும் எப்போதும் உடனிருப்பார்கள் என்ற நம்பிக்கையை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் துவக்கம்…

கோவை: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை கோவையில் அமைச்சர் சம்பத்குமார் துவக்கி வைத்தார். மதுரையில் முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தைப் பிற்படுத்தப்பட்டோர்...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...