கோவையில் தேசிய அளவிலான ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’! கரடுமுரடான பாதையில் சீறிப்பாய்ந்த பைக்குகள்

கோவை : பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவையில் தேசிய அளவிலான ‘நமோ ஆட்டோகிராஸ் 2026’ ஆஃப்-ரோடு இருசக்கர வாகன பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Advertisement

கோவை சின்னியம்பாளையம் அருகே தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் இரண்டாவது ஆண்டாக போட்டி நடத்தப்பட்டது.

பா.ஜ.க. மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்ற போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு மாவட்ட தலைவர் பிரனேஷ் செய்திருந்தார்.

போட்டியை தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பைக் ரேஸ் வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

Advertisement

100 சிசி முதல் 400 சிசி வரையிலான பைக்குகள் பங்கேற்ற இந்த போட்டி சுமார் 10 பிரிவுகளாக நடத்தப்பட்டது. சிறுவர்களுக்கான சிறப்புப் பிரிவும் இடம்பெற்றது.

கரடுமுரடான பாதைகள், வளைவுகள் மற்றும் பல்வேறு தடைகள் கொண்ட சுற்றுப்பாதையில் வீரர்கள் பைக்குகளை வேகமாக இயக்கி சாகசங்களை நிகழ்த்தினர். பைக்குகள் சீறிப்பாய்ந்தபோது எழுந்த புழுதியும், வீரர்களின் சாகசங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. திரண்டிருந்த பொதுமக்கள் போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Advertisement

தொடர்ந்து பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து பொதுமக்களுடன் இணைந்து போட்டிகளை நயினார் நாகேந்திரன் பார்வையிட்டார். பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், கோவையில் ஆஃப்-ரோடு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய திறமைகளை அடையாளம் காணும் நோக்கிலும் இந்த போட்டி நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஆண்டு போட்டியில் பங்கேற்ற 4 வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியதாகவும், இனி ஆண்டுதோறும் ‘நமோ ஆட்டோகிராஸ்’ போட்டியை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மோட்டார் ஸ்போர்ட்ஸை தமிழக அரசின் விளையாட்டுத்துறையின் கீழ் உரிய பிரிவில் முறைப்படுத்தி இணைக்க வேண்டும் என்றும், இந்த துறையை மேம்படுத்துவதுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

வடக்கன்ஸ் அலப்பறைகள்; காளப்பட்டியில் நடுரோட்டில் ரகளை ! வைரல் வீடியோ

காளப்பட்டி நேரு நகர் பகுதியில் மதுபோதையில் சாலையில் வாகனங்களை மறித்து சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...