கோவை: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை புரிந்த மு.க.ஸ்டாலினுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதற்காக வருகை புரிந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாராபுரம் இடைத்தேர்தலில் நாளை திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து நாளை பிரச்சாரம் மேற்கொள்ள முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
அவருக்கு, கோவை மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தலைமையில் கோவை விமான நிலையத்தில் இருந்து, அவினாசி சாலை வரை மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பின்போது, ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் கேஎன்.நேரு, சாமிநாதன் கழக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா, திமுக மாவட்ட செயலாளர்கள் துரை செந்தமிழ்செல்வன், சாமிநாதன், மேயர் ரங்கநாயகி, நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
மேலும் விமான நிலையம் முதல் அவிநாசி பிரதான சாலை வரை திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.





