கோவையில் பெருமாள் கோவில்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு…

கோவை: மேல்முடி மற்றும் பெருமாள் முடி கோவில்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவையில் உள்ள பெருமாள் முடி மற்றும் மேல்முடி ஆகிய மலை கோவில்களுக்கு புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாதமான புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்த இரண்டு கோவில்களும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளதால், அதிக அளவில் பக்தர்கள் கூடுவது வனப்பகுதியை பாதுகாத்தல், வன உயிரினங்கள் மற்றும் பல்லுயிர்களை பாதுகாத்தல், குப்பைகள் சேராமல் தடுத்தல், காட்டுத்தீ ஏற்படாமல் தடுத்தல் மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது போன்றவற்றில் சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள்முடி மற்றும் மேல்முடி கோவில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதன்படி பெருமாள்முடி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாங்கரை சோதனைச் சாவடியை பயன்படுத்த வேண்டும். மேல்முடி செல்லும் பக்தர்கள் பாலமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோதனைச் சாவடி வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். தடாகம் வழியாக செல்ல தடை செய்யப்படுகிறது.

மேல்முடி மற்றும் பெருமாள்முடி செல்லும் பக்தர்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் தரிசனம் முடித்த பக்தர்கள் மாலை 4 மணிக்குள் அந்தந்த சோதனைச் சாவடியை வந்தடைய வேண்டும். இனிவரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள்முடி கோவிலுக்கு அதிகபட்சம் 1000 எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

Advertisement

மேலும், வாகனங்களின் நுழைவு எண்ணிக்கை அதிகபட்சம் 250 மட்டுமே (இதில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் இரண்டும் அடங்கும்). மேலும் அதேபோல் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மேல்முடி கோவிலுக்கும் அதிகபட்சம் 500 எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

மேலும், வாகனங்களின் நுழைவு எண்ணிக்கை அதிகபட்சம் 150 மட்டுமே (இதில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் இரண்டும் அடங்கும். வனப்பகுதியை சுத்தம் செய்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்காக, ஒரு நபரிடமிருந்து ரூ.15/- பாதுகாப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்.

சுகாதாரத்துறையினரால் முறையான உடல்நலப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் மலையேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்..

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பேரூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம்- இடம், தேதி அறிவிப்பு…

கோவை: பேரூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் தீத்திபாளையம் கிராமம், புது ரோடு, லோட்டஸ் மஹாலில் வருகின்ற 14.10.2026 அன்று காலை 10.30...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...