கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி 06.10.2026 மற்றும் 07.10.2026 ஆகிய இரண்டு நாட்களில் வழங்கப்பட உள்ளது.
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.
இந்த பயிற்சியில், முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ்
உலர்ந்த காளான், காளான் பொடி, ஆப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், காளான் கிரேவி கலவை, பிழிதல் தொழில் நுட்பம் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) பயிற்சி முதல் நாளன்று செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





