கோவைக்கு மீண்டும் விஜய் வருகை… கட்டுப்பாடுகளை விதித்தது மாவட்ட நிர்வாகம்!

கோவை: முதலமைச்சர் விஜய் கோவை வர உள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முதலமைச்சர் விஜய் மீண்டும் கோவை வர உள்ளார்.

விஜய், வரும் 4-ம் தேதி கோவை மாவட்டம் வழியாக திருப்பூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையில் குறிப்பிட்ட பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன், கோவை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், ஹோப் கல்லூரி, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர், இருகூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement

அதேபோல், கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூர் புற காவல் நிலையம், சிந்தாமணிபுதூர் சந்திப்பு, சூலூர் Y ஜங்சன், சூலூர் புதிய பேருந்து நிலையம், காங்கேயம்பாளையம் சந்திப்பு மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளிலும் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை வரும் 3-ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 5-ம் தேதி காலை 9 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தடைக்காலத்தில் விதிமுறைகளை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊர்திகளை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பேரூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம்- இடம், தேதி அறிவிப்பு…

கோவை: பேரூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் தீத்திபாளையம் கிராமம், புது ரோடு, லோட்டஸ் மஹாலில் வருகின்ற 14.10.2026 அன்று காலை 10.30...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...