SIR முடிந்த நிலையில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தல்…

கோவை: SIR முடிந்த மாநிலங்களில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்தியத் தேர்தல் ஆணையமானது தனது 29.09.2026-ல் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாகசிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (Special Intensive Revision) ஏற்கனவே நிறைவடைந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், அமைந்துள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் தொடர் திருத்த நடைமுறையின் (Continuous Updation) கீழ், விடுபட்ட வாக்காளர்கள் மற்றும் இளம் முதல் முறையாகத் தகுதியும் வாக்காளர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாமை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் (Electoral Registration Officers) மேற்கொள்ள வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கத் தொடர்பாக படிவம் 6 உடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவம் (Declaration Form), சிறப்புத் தீவிரத் திருத்தக் (Special Intensive Revision) காலக் கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தற்போதைய சிறப்புத் தீவிரத் திருத்தம் அல்லாத காலக்கட்டங்களில், “வாக்காளர் பதிவு விதிகள் 1960 στ படி பொருந்தக்கூடிய படிவங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட மற்றும் தகுதியுள்ள இளம் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனவும், சிறப்பு முகாம்கள் நடைபெறும் குறித்த தேதி பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, வாக்காளர்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பேரூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம்- இடம், தேதி அறிவிப்பு…

கோவை: பேரூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் தீத்திபாளையம் கிராமம், புது ரோடு, லோட்டஸ் மஹாலில் வருகின்ற 14.10.2026 அன்று காலை 10.30...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...