கோவை மருத்துவர் பி.எஸ். ராஜனின் சேவைகளைப் பாராட்டி விருது… மருத்துவர்கள் வாழ்த்து…!

கோவை: கோவை ELCE Hospital – Gastro & Gyne Care மருத்துவமனையின் தலைவர் மற்றும் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு, அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் துறையில் அவர் ஆற்றிவரும் மருத்துவச் சேவைகளைப் பாராட்டி, ஆதித்யா டிவி சார்பில் ‘சிறந்த அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் நிபுணர் விருது – 2026’ வழங்கப்பட்டது.

Advertisement

கோவையில் ஆதித்யா டிவி சார்பில் நடைபெற்ற ‘ஆயுத பூஜை சிறப்பு பட்டிமன்றம்’ நிகழ்ச்சியில் டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பிரபல தமிழ்ப் பேச்சாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் அரிமா அமைச்சரவைச் செயலாளர் லயன் டாக்டர் பி. ராமசுப்பிரமணியன் மற்றும் ஜனாஷா டிஎன் நிதி லிமிடெட் நிறுவனத்தின் டாக்டர் நந்தகுமார் ஆகியோர் இணைந்து விருதை வழங்கினர்.

MS, DNB, FACS, FICS, FMAS, FAIS உள்ளிட்ட மருத்துவத் தகுதிகளைக் கொண்ட டாக்டர் பி.எஸ். ராஜன், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சை இரைப்பைக் குடலியல் மற்றும் எண்டோஸ்கோபி உள்ளிட்ட மருத்துவத் துறைகளில் சிறப்பு அனுபவம் பெற்றவர்.

Advertisement

அவரது தலைமையில் செயல்பட்டு வரும் ELCE மருத்துவமனையில் இரைப்பைக் குடல் தொடர்பான நோய்கள் மற்றும் மகளிர் நலப் பிரச்சினைகளுக்கு சிறப்பு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மருத்துவத் துறையில் டாக்டர் பி.எஸ். ராஜன் ஆற்றிவரும் சேவைகளுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அவரது மருத்துவப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.

Advertisement

விருது பெற்ற டாக்டர் பி.எஸ். ராஜனுக்கு ELCE மருத்துவமனை மருத்துவர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கலைக்கு கட்டுப்பாடே கிடையாது- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி…

கோவை: கலைக்கு கட்டுப்பாடே கிடையாது என்றும் எனக்கு தற்போதைக்கு 2 மொழிகள் போதுமானதாக உள்ளது என்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். கோவை பிராட்வே சினிமாஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி,...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...