கலைக்கு கட்டுப்பாடே கிடையாது- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி…

கோவை: கலைக்கு கட்டுப்பாடே கிடையாது என்றும் எனக்கு தற்போதைக்கு 2 மொழிகள் போதுமானதாக உள்ளது என்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவை பிராட்வே சினிமாஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி, மீசையை முறுக்கு 2 திரைப்படம் வெற்றிகரமாக ஓடி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தடைகள் இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்றும், படத்தில் மக்கள் தங்களது கதையைப் பார்ப்பதாகவும் கூறினார்.

கலைக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது எனக் கூறிய ஆதி, கணக்கை கால்குலேட்டர் அல்லது ஏ.ஐ. மூலம் எப்படிப் போட்டாலும் முடிவு சரியாக வருகிறதா என்பதுதான் முக்கியம் என்றார். இசையைத் தானாகக் கற்றுக்கொண்டதாகவும், இணையத்தில் உள்ள டுடோரியல்கள் மூலம் பல விஷயங்களைக் கற்றதாகவும் தெரிவித்தார். வசதி வாய்ப்புகள் தடையாக இருந்தாலும், வழியைத் தேடிக் கண்டுபிடித்து முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

தமிழி, ஆதிச்சநல்லூர், பொருநை உள்ளிட்ட ஆவணங்கள் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், சர்வதேச அளவில் பணியாற்றி வருவதாகவும் ஆதி தெரிவித்தார். கானா கலைஞர்களுக்கான தளத்தைத் தொடங்கியுள்ளதாகவும், ட்ரெண்ட் சஞ்சய், ஜூனியர் நித்யா, கானா உலகம் தரணி உள்ளிட்ட கலைஞர்களின் பாடல்கள் அதில் வெளியாக உள்ளதாகவும் கூறினார்.

Advertisement

ஏ.ஐ. மனிதர்களின் வேலையை எளிதாக்கும் ஒரு கருவி மட்டுமே என்றும், தற்போதைய நிலையில் அது மனிதர்களின் படைப்பாற்றலை ஈடு செய்ய முடியாது என்றும் ஆதி தெரிவித்தார். மேலும், ஓ.டி.டி. வியாபாரம் குறித்து தனக்கு அதிகம் தெரியாது என்றும், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களே அது குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறினார். பி.எச்.டி. முடித்துவிட்டதாகவும், நாவல் ஒன்றை எழுதி வருவதாகவும் தெரிவித்தார்.

அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, தான் இசையமைத்துக் கொண்டு தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், ஓட்டு அரசியல் குறித்து தனக்கு ஐடியா இல்லை என்றும் ஆதி கூறினார்.

Advertisement

தற்போதைய அரசியல் குறித்த தனிப்பட்ட கருத்தைப் பதிவு செய்ய விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். இந்தி எதிர்ப்பு குறித்து தற்போது பாடல் எழுதவில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகள் தனது தொழிலுக்கும் தகவல் தொடர்புக்கும் போதுமானவை என்றும் அவர் கூறினார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...