எதிர்க்கட்சியினர் விமர்சனத்திற்கு எதிர் கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ஆனந்த்…

கோவை: முதல்வர் மக்களை சந்திக்கக்கூடாதா என்று அமைச்சர் ஆனந்த் எதிர்க்கட்சியினர் விமர்சனத்திற்கு எதிர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

தோல்வி பயத்தின் காரணமாகவே முதலமைச்சர் தாராபுரம் தொகுதியில் இரண்டாவது முறையாக பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு மக்களை சந்திக்க வேண்டாம் என்று கூறுகிறீர்களா? என பதில் கேள்வி எழுப்பி உள்ளார் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் விமானம் மூலம் கோவை வந்தார். முன்னதாக கோவை விமான நிலையத்தில் ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தாயகம் திரும்பிய கோவையைச் சேர்ந்த வித்யா ராமராஜுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement

தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளைய தினம் தாராபுரம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் இரண்டு முறை முதலமைச்சர் பிரச்சாரம் செய்வது தோல்வி பயத்தின் காரணமாகவே என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனரே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், மக்களை சந்திக்க வேண்டாம் என்று கூறுகிறீர்களா? எனவும் என்ன வித்தியாசமாய் கேள்வி எழுப்புகிறீர்கள்? எனவும் பதில் கேள்வி எழுப்பி புறப்பட்டு சென்றார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கலைக்கு கட்டுப்பாடே கிடையாது- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி…

கோவை: கலைக்கு கட்டுப்பாடே கிடையாது என்றும் எனக்கு தற்போதைக்கு 2 மொழிகள் போதுமானதாக உள்ளது என்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். கோவை பிராட்வே சினிமாஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி,...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...