கோவை பன்னீர்மடையில்
மூன்றாம் ஆண்டு கருட சேவை விழா விமர்சையாக நடைபெற்றது.
கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை அருள்மிகு ஸ்ரீ உலகலந்த பெருமாள் திருக்கோவில், அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோவிலில் கவர நாயுடு சமூகம் சார்பில் மூன்றாம் ஆண்டு கருட சேவை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை துடியலூரை அடுத்த பன்னீர்மடை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ உலகலந்த பெருமாள் திருக்கோவில், அருள்மிகு கிருஷ்ணசாமி திருக்கோவிலில் கவர நாயுடு சமூகம் சார்பில் ஆண்டு தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோட்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவ மூர்த்திகள் இராமஜூனு அம்மாள் திருக்கோவில் வழியாக மிக பிம்மாண்டமான கருட சேவை அகண்ட திவ்ய நாம பிரபஞ்ச பஜனையுடன் உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு மூன்றாவது ஆண்டாக கருட சேவை விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்மிகு செல்வ விநாயகர், ஸ்ரீ உலகலந்த பெருமாள், அருள்மிகு கிருஷ்ணசாமி மற்றும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து எல் இ டி விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருள அகண்ட திவ்ய நாம பிரபஞ்ச பஜனையுடன் சுவாமி திருவீதி உலா பன்னீர்மடை இராமஜூனு அம்மாள் திருக்கோவில் வழியாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






